Tuesday, March 6, 2012

ASANAS- PAPER-2




par-ee-vrit-tah trik-cone-AHS-anna)
parivrtta = to turn around, revolve
trikona = three angle or triangle


Type of pose: Standing, balancing, twisting
Benefits: Strengthen the ankles, and thighs, improves balance, cleanses the organs

Instructions:

1. From Trikonasana, soften the right knee and bring the right hand to your hip.

2. Place the left hand flat on the floor about a foot in front of the right foot.

3. Begin to straighten the right leg while simultaneously kicking up the left leg parallel to the floor.

4. Twist the torso towards the right, bringing the right arm up toward the ceiling and the gaze up to the right fingertips.

5. Keep both hips squared towards the floor.

Beginners: Take a block underneath the left hand. Do the pose near a wall and bring the left foot to the wall when you kick up the left leg. ARDHA MATSYENDRASANA
இந்த யோகாசனத்தில் இடுப்பை பாதியாக பக்கவாட்டில் வளைக்கவேண்டும். இந்தப் பெயர் ஹட யோகத்தை சிறப்பான முறையில் விளக்கிய மத்ஸ்யேந்திர நாத் என்ற யோகியின் பெயரால் அறியப்படுகிறது. "அர்த" என்ற வடமொழிச் சொல்லுக்கு "பாதி" அல்லது "அரை" என்று பொருள். இடுப்பை முழுதும் வளைப்பது கடினமான யோக முறையாதலால் அர்த மத்ஸ்யேந்திர அல்லது இடுப்பை பாதி வளைக்கும் யோக முறை யோகா பயிற்சியாளர்களிடையே பிரபலமடைந்தது. வளைக்கும் ஆசன நிலைகளில் அர்த மத்ஸ்யேந்திராசனா ஒரு சிறப்பான யோக நிலையாகும். ஒட்டுமொத்த முதுகெலும்புப் பகுதியும் அதன் மைய அச்சில் முழு சுழற்சையை எய்தும் இந்த யோகாசனத்தால் ஏற்படும் உடல் ரீதியான பயன்கள் அளப்பரியன. மேலும் முதுகெலும்பு அதன் முழு நீளத்திலும் இருபக்கமும் வளையும் இந்த யோக முறையில் கைகளும், முழங்கால்களும் நெம்புகோலாக செயல்படும். முறை: WDசாதரணமாக உட்காரவும். நன்றாக நிமிர்ந்து உட்காரவேண்டும். கால்களை முன்னால் நன்றாக நீட்டவேண்டும். குதிகால் விதைப்பைக்கும் எருவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கவேண்டும். வலது தொடையை நேராக வைக்கவேண்டும். இப்போது உங்கள் இடது பாதத்தை தரையில் வைக்கவேண்டும். வலது முழங்காலை குறுக்காக வைக்கவும். உங்கள் இடது முழங்கால் வலது முழங்காலின் வலதுபுறத்திற்கு அருகில் இருக்கவேண்டும். வலது புஜத்தை இடது முழங்காலின் இடது புறமாக கொண்டு செல்லவும். வலது கையை இடது கால் கெண்டைத் தசைக்கு நேராக வைத்திருக்கவும். இடது கால் பகுதியை உங்கள் வலது கை கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றால் பிடிக்கவும். உங்கள் இடது கையை இடதுபுற இடுப்பு வழியாக செலுத்தி வலது தொடையின் கீழ்ப் பகுதியை பற்றவும். உங்கள் உடலை இடதுபக்கமாக திருப்பவும். இதைச் செய்யும்போதே தோள்பட்டைகள், கழுத்து மற்றும் தலைப் பகுதியை இடது புறமாக திருப்பவும். கன்னத்தை இடது தோளுக்கு நேராக கொண்டு வரவும். அப்படியே பின்புறமாக நீண்ட தூரத்திற்கு பார்வையை செலுத்தவும். உங்கள் தலை, முதுகெலும்புப் பகுதிகளை நிமிர்ந்திருக்குமாறு இருக்கவும். இதே நிலையில் நீங்கள் வசதியாக உணரும் வரை இருக்கவும். பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதே முறையைமற்றொரு பக்கமும் செய்யவும். பயன்கள்: தண்டுவடம், குறிப்பாக இடுப்புத் தண்டெலும்புக் கண்ணி நினைத்தபடி வளையும் தன்மை பெறும். இவ்வாறு ஏன் வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுகிறதென்றால், முதுகெலும்பை சுழற்றும்போது அசையும் ஒவ்வொரு தண்டெலும்புக் கண்ணியும் முழு சுழற்சி பெறுகிறது. எச்சரிக்கை: முதுகெலும்பு அல்லது வயிறு உபாதைகள் இருக்கும்போது இந்த ஆசனத்தை செய்யவேண்டாம்.

No comments:

Post a Comment